பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு ஆப்பு! கல்வி அமைச்சு அதிரடி!!

வசதி  மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

வசதிகள் மற்றும் சேவை கட்டணங்கள் அறிவிடும் போது குறித்த பணம் தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளரிடமும், மாகாண பாடசாலையாயின் மாகாண கல்வி செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தன்னுடைய விருப்பின் பிரகாரம் சுற்று நிருபத்தை மீறி பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பணம் அறவிடுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

இதன் பிரகாரம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணம் அறவிடும் அதிபர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தி உடன் அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு அப்பால் இது தொடர்பான முறைப்பாடுகளை கல்வி அமைச்சின் 1988 என்ற இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என மக்களுக்கு அறிவித்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *