தமிழ் படங்களில் எத்தனை கதாநாயகிகள் இருந்து வந்தாலும், கவர்ச்சி காட்சிகளில் நடிக்க “கவர்ச்சி நடிகைகள்” என ஒரு சாராரும் இருந்து தான் வந்தார்கள். 80களில் வெளிவந்த படங்களில் குறைந்தது ஒரு கவர்ச்சி பாடலாவது இருக்கும் என்கின்ற நிலைதான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இருந்து வந்தது.
இந்த கவர்ச்சி நடிககைகள் நாளடைவில் ‘குணச்சித்திர வேடம்’, ‘ வில்லி’ கதாபாத்திரம் என காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டனர். இப்படிப்பட்ட கவர்ச்ச்சி நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்தவர் ‘ஒய்.விஜயா’. “எம்.ஜி.ஆர் – சிவாஜி” காலம் துவங்கி ரஜினி – கமல் வரை அதிக படங்களில் நடித்தவர் இவர்.
குறிப்பாக “மன்மத லீலை” படத்தில் வரும் ‘ஹலோ, மை டியர் ராங் நம்பர்’ என்கின்ற பாடலின் மூலம் அந்த கால இளசுகளை தன் பின்னால் சுற்றி, சுற்றி வர வைத்தவர் இவர். இவரது வாழ்வில் குறிப்பிட்டு சொல்லும் வெற்றியில் இந்த படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
“ராஜாதி ராஜா” படத்தில் கிட்டத்தட்ட ‘வில்லி’ கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படத்தில் ரஜினியும் தந்தையாக வரும் விஜயகுமாரின் இறப்புக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர் என வரும் வேடம். அப்படி இவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பெற்ற படத்தில் நடிக்க துவங்கும் போது ஒய்.விஜயா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தாராம் .ஆனால், இயக்குனர் உட்பட யாரிடமும் இதை சொல்லவில்லையாம்.
இந்த விஷயம் ரஜினிக்கு தெரியவர படப்பிடிப்பு முடியம் வரை இவர் மீது அதிக அக்கறை காட்டி வந்தாராம். மேலும் இவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தவரை அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியதிருந்ததாம்.
ஒரு காட்சி படப்பிடிப்பிற்காக மலையேற வேண்டியதிருந்ததாம். அப்பொழுது படக்குழுவினர் இவரை அதிக கவனத்துடன் பார்த்துக்கொண்டார்களாம். இவரின் உடல் நலனில் படக்குழுவினர காட்டிய அன்பும், பாசமும் இவருக்கு தனி உற்சாகமும் தந்ததாம். கூடவே தனது கணவர் கொடுத்த ஒத்துழைப்பு தன்னை சினிமாவில் ஒரு இடத்தை அடைய துணையாக இவருந்ததாக குறிப்பியிட்டிருந்தார் அவரது பேட்டி ஒன்றில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *