பூமிக்குள் புதைந்து கிடக்கும் தங்கம் விண்ணில் இருந்து எப்படி வந்தது?

பூமியில் இருக்கும் தங்கம், பிளாட்டினம் போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்கள் எப்படித் தோன்றின?

இதுநாள்வரை விஞ்ஞானிகள் இந்தக் கேள்விக்குக் கொடுத்த பதில்: சூப்பர்நோவாக்கள் எனப்படும் சில நட்சத்திரங்கள் வெடிக்கும்போது, அவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் இந்த உலோகங்கள் தோன்றுகின்றன.

ஆனால் இந்த பதில் சரியானதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

காரணம்?

ஒரு நட்சத்திர வெடிப்பு.

கடந்த 2022-ஆம் ஆண்டு தென்பட்ட ஒரு பெரும் வெளிச்ச வெடிப்பினை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அதன் மத்தியில் ஒரு நட்சத்திர வெடிப்பு இருந்தது என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

ஆனால், அங்குதான் ஒரு திருப்பம்.

ஒரு சூப்பர்நோவா வெடிப்புமட்டுமே அவ்வளவு அதிகமான வெளிச்சத்தை உருவாக்கியிருக்க முடியாது.

மேலும், அந்த வெடிப்பிலிருந்து தங்கம், பிளாட்டினம் போன்ற எந்த உலோகங்கமும் தோன்றவில்லை, என்பதையும் அந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

இதுபோன்ற முடிவுகள் தான் அறிவியலை முன்னெடுத்துச் செல்கின்றன என்கிறார், எடின்பரா பல்கலைகழகத்தின் பேராசியிரயும், ஸ்காட்லந்தின் அரச விண்ணியலாளருமான பேராசியர் கேத்தரின் ஹெய்மன்ஸ். இந்த ஆய்வில் இவர் பங்குபெறவில்லை.

“பிரபஞ்சம் அற்புதமான, ஆச்சரியமான ஒரு இடம். அது இதுபோல நம்மிடம் முரண்டு பிடிப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். நாம் எதிர்பார்க்கும் பதில்களை நமக்கு அது தராவிட்டால் நல்லதுதான். ஏனெனில் நாம் மீண்டும் முதலிலிருந்து அந்த பதில்களைத் தேடத்துவங்கலாம். இன்னும் மேம்பட்ட கோட்பாடுகளை உருவாக்கலாம்,” என்கிறார் அவர்.

  • சூப்பர்நோவா, தங்கம், அறிவியல்
அப்படியென்றால் தங்கம் எங்கிருந்து வந்தது?

ஒரு கோட்பாட்டின் படி, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் போன்ற கனமான உலோகங்கள் சூப்பர்நோவாக்களின் அதீதமான சூழ்நிலைகளால் உருவாகக்கூடும். இவை பிரபஞ்சத்தில் பரவி, கிரகங்கள் உருவாகப் பயன்படுகிறது. இப்படித்தான் பூமியில் தங்கம் தோன்றியிருக்க வேண்டும் என்கிறது இந்தக் கோட்பாடு.

பார்க்கப்போனால், நியூட்ரான் நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் மோதிக்கொள்ளும்போது தங்கம் போன்ற கனமான உலோகங்கள் தோன்றும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறையில் குறைந்த அளவு தங்கமே உருவாக முடியும்.

இருப்பினும், இந்த ஆராய்ச்சிக்குழு மற்ற சூப்பர்நோவாக்களின் எச்சங்களில் கனமான உலோகங்களைத் தேடும். சூப்பர்நோவா வெடிப்புகளில் இந்த உலோகங்கள் உருவாகுமா என்பதை அறிந்துகொள்ள.

சூப்பர்நோவா, தங்கம், அறிவியல்

பட மூலாதாரம்,ANTHONY BRADSHAW

ஆனால், வெடித்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி தங்கம்போன்ற உலோகங்கள் இருப்பதற்கான எந்த நிரூபனத்தையும் விஞ்ஞானிகள் கண்டறியவில்லை.

அப்படியெனில் இந்தக் கோட்பாடு தவறா? தங்கம் போன்ற கனமான உலோகங்கள் வேறேதாவது வழியில் தோன்றியிருக்கக்கூடுமா? அல்லது சூப்பர்நோவாக்களில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அவை தோன்றுமா?

இந்த ஆய்வின் மற்றொரு இணைத்தலைவரான பீட்டர் ப்ளான்ஷார், இதற்கு விடைகாண கோட்பாட்டாளர்கள் தங்கள் கோட்பாட்டை மறு ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்.

  • சூப்பர்நோவா, தங்கம், அறிவியல்
வரலாற்றில் மிகப்பிரகாசமான வெடிப்பு

இந்த வெடிப்பு 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டது. இது 240 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்தது. அனைத்து அலைநீளங்களிலும் ஒளியை வெளியிட்டது. ஆனால் அதன் காமா கதிர்கள் மிகவும் ஆற்றல்மிகுந்ததாக இருந்தன.

இந்த காமா கதிர் வெடிப்பு ஏழு நிமிடங்கள் நீடித்தது. மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அளவிடும் கருவிகளால் கூட அதனை அளக்க முடியவில்லை. அடுத்தடுத்த ஆராய்ச்சிகள், அந்த வெடிப்பு இதுவரை பதிவுசெய்யப்பட்ட எதையும் விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதைக் காட்டியது. வானியலாளர்கள் இதற்கு ‘பிரைட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (the Brightest Of All Time – B.O.A.T) என்று புனைப்பெயர் சூட்டினர்.

பொதுவாக, காமா கதிர் வெடிப்புகள் சூப்பர்நோவா வெடிப்புகளுடன் தொடர்புடையவை. ஆனால் இந்த வெடிப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. அதை எளிதாக விளக்க முடியவில்லை. அது ஒரு சூப்பர்நோவாவாக இருந்திருந்தால், தற்போதைய கோட்பாட்டின் படி, அது முற்றிலும் மிகப்பெரியதாக இருந்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (JWST) கருவிகளை திகைக்க வைத்தது. இதுபோன்ற சக்திவாய்ந்த வெடிப்புகள் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்று கணக்கிடப்படுகிறது.

இந்த ஒளி மங்கியதும், JWST-வின் கருவிகளில் ஒன்று, அதில் ஒரு சூப்பர்நோவா வெடிப்பு இருப்பதைக் கண்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அது வலுவாக இருக்கவில்லை.

அப்படியானால் ஏன் காமா கதிர்களின் அவ்வளவு ஆற்றல்மிக்கதாக இருந்தன?

அதற்கான விடையை விஞ்ஞானிகள் இன்னும் தேடியபடி இருக்கின்றனர்.

ஒரு சன்னமான கற்றையில் ஒளியைப் பாய்ச்சும்போது அதன் ஆற்றல் அதிகரிப்பதுபோல இந்த காமா கதிர்களின் ஆற்றல் அதிகரித்திருக்கலாம் என்று ஊகிக்கிறார் இந்த ஆய்வின் யூடா பல்கலைகழகத்தைச் சேர்ந்த தன்மொய் லஸ்கர். இவர் இந்த ஆய்வின் துணைத்தலைவர் ஆவார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *