இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

சீனாவிற்கு உயர்தர இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கும் இலத்திரனியல் வாகன இறக்குமதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்குவதற்கும் சாத்தியம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் (CASMCE) இடையிலான சந்திப்பொன்று இன்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, CASMCE சங்கத்தின் துணைத் தலைவர் சூ சியேங் ( XU XIANG), இந்நாட்டில் சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் மற்றும் உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்களை மேம்படுத்துவதில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு | Priority For Export And Import To China

அதேவேளை, இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் சீன தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *