வெளிநாட்டவர்கள் 40 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கும் சுவிஸ்!

சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால், நாங்களும் சுவிஸ் குடியுரிமை வழங்குகிறோம் தெரியுமா என்னும் ரீதியில், கடந்த ஆண்டில் வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்பட்டது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், சுவிட்சர்லாந்து, ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 41,299 வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து குடியுரிமை வழங்கியுள்ளது.

ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? | Swiss Grants Citizenship To 40 000 Foreigners

விடயம் என்னவென்றால், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பான்மையினர் அக்கம்பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆம், சுவிஸ் குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் பாதி பேர் ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்!

மேலும், குடியுரிமை பெற்றவர்களில் 33 சதவிகிதம்பேர் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். வெறும் 17 சதவிகிதத்தினர் மட்டுமே, மூன்றாம் உலக நாடுகள் என்னும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *