காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது பொலிஸ் ஊரடங்கு!

சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும், மீண்டும் இன்று மாலை 5 மணி தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *