நாவலப்பிட்டிய ‘ஒப்பரேஷன்’ – படங்களின் தொகுப்பு

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் தேப்பட்டுவந்த இரண்டு பிரதான சந்தேக நபர்களை நாவலப்பிட்டிய பொலிஸார் இன்று கைது செய்தனர்.

குண்டு வெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உஷாரடைந்த நாவலப்பிட்டிய பொலிஸார், விசேட அதிரடிப்படையினரையும் இணைந்துக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதன்படி நாவலப்பிட்டிய நகரிலுள்ள பள்ளவாசல், அராபி முஸ்லிம் பாடசாலை ஆகியன சோதனைக்குட்படுத்தப்பட்டன. அத்துடன், சந்தேகத்துக்கிடமான இடங்களும் சல்லடை செய்யப்பட்டன. இதன்போது வேன் சாரதியொருவர் ( 27 ஆம் திகதி) கைது செய்யப்படடார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கம்பளையில் பதுங்கியிருப்பதாகவும், அவர்களை தான்தான் வேனில் ஏற்றிச்சென்றதாகவும் குறிப்பிட்டார்.

இதன்படி கம்பளையில் குறித்த பாதணி கடையை நோக்கி பொலிஸார் வந்தனர். கடைபூட்டப்பட்டிருந்ததால் அதனை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

( (நோட்டன் பிரிஜ் நிருபர்  – எம் கிருஸ்ணா )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *