தாமரை மொட்டுடன் சங்கமிக்கிறது ‘கை’! பொதுச் சின்னத்தில் போட்டியிட முடிவு!! – ஒப்புதலுக்காக கூடுகின்றது சு.க. மத்தியக்குழு

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து – ‘மெகா’ கூட்டணி அமைத்து பொது சின்னத்தின்கீழ் தேர்தலில்  போட்டியிடவுள்ளன.

சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பஸில் ராஜபக்சவுக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது என்றும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சு.கவின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று (08) இரவு நடைபெறவுள்ள சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்திலும் மேற்படி விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

சிங்கள மங்களின் பாரம்பரியத்தை அடையாளச் சின்னங்களுள் ஒன்றான  பொற்குடம் அல்லது பொற்பானை சின்னமே பொதுச்சின்னமாக இருக்கும் என்றும் வெற்றிலைபோலவே இதுவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபைத் தேர்தலோ அல்லது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலோ கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சு.கவின் கொள்கையாக இருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *