ராஜயோகம் கைநழுவுவதால் மீண்டும் மந்திரக்கோலை ஏந்தினார் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ச ‘ஆன்மீக அரசியல்’மீது அதீத நம்பிக்கை கொண்டவர். கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக இருந்தால்கூட சுபநேரம் பார்த்தே அதை செய்வார். இதற்காக விசேட ஜோதிடப்பிரிவொன்றையும் நிறுவினார். சுமனதாச என்பவர் அப்பிரிவின் தலைவராக இயங்கினார். உள்நாட்டில் மட்டுமல்ல கேரள மந்திரவாதிகள்மீதும் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.

ஜனாதிபதி பதவியை வகித்த காலப்பகுதியில் மஹிந்தவின் கையில் எப்போதுமே மந்திர கோல் இருக்கும். நம்பூதிரிகளால் விசேடமாக யாகம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட மோதிரத்தையும் போட்டிருப்பார். அதை மந்திர மோதிரம் என விளிப்பார்கள்.

இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மீண்டும் மந்திரகோலை மஹிந்த ராஜபக்ச கையில் எடுத்துள்ளார்.  இதுதொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ராஜயோகம் கைநழுவிப்போகக்கூடாது என்பதற்காகவே ஜோதிடர்கள், மந்திரவாதிகளின் ஆலோசனையின் பிரகாரம் மீண்டும் மந்திரகோலை கையில் எடுத்துள்ளார் என அரசல், புரசலாக பேசப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *