அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இலங்கை பதிவு

தெற்காசிய நாடுகளுள் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை அதிக வீதத்தால் காணப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

எண்ணிக்கையளவில் சுமார் 25 இலட்சமாக காணப்படும் நிலையில் இது 11 வீதமாக காணப்படுகின்றது.

ஏனைய நாடுகளான பங்களாதேஷில் இது 6 வீதமாக காணப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் 2 வீதமாகவும் , பூட்டானில் 6 வீதமாகவும், இந்தியாவில் 7 வீதமாகவும் , மாலைதீவில் 5 வீதமாகவும் பாகிஸ்தானில் 4 வீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் , இது கடந்த 2000ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் 7 வீதமாக காணப்பட்டுள்ளது.

மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை தற்போது 39 இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் அது 17.6 வீதமாக காணப்படுகின்றது.

அதன்படி, 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களுள் 7,30,000 அண்மித்த எண்ணிக்கையிலானோர் அரசாங்கத்தினால் ஓய்வூதியம் பெறுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் மூலம் முதியோர்களுக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் 3000 ரூபாயை பெறுபவர்கள் 5,30,000 ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வாறு நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அரசாங்கம் மட்டுமன்றி மூத்த குடிமக்களும் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *