மனிதர்கள் வாழக்கூடிய சாதகமான கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்ற உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமான கிரகம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.

ஜேம்ஸ் வெப் எனும் விண்வெளி தொலைநோக்கி (Space Telescope) வேற்று கிரக வாழ்க்கைக்கான சாத்தியமான கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

K2-18B என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

இதன் உயிரைக் காப்பாற்றும் திறன் காரணமாக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பூமியின் அளவை விட 2.6 மடங்கு அதிகமாக உள்ள கடல் சூழ்ந்த கிரகம் என்று நம்பப்படுகிறது.

james webb found life indication planet

இந்த கிரகம் உயிர்கள் வாழ தகுதியானது என்பதை நிரூபிக்கும் தரவுகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், தற்போதைய ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன.

ஆனால், இந்த கிரகத்தை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகும். அதாவது மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீரும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி பயணித்தாலும், அந்த கிரகத்தை அடைய சுமார் 22 லட்சம் ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *