அயோத்தியில் விருந்துக்கு ரூ.50 கோடி செலவை ஏற்கிறார் நடிகர் பிரபாஸ்?

 

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.

இந்நிலையில், மைசூரு சிற்பி தயாரித்த குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு நேற்று கருவறையில் நிறுவப்பட்டது.

மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

பொலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 22 -ம் திகதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது முதல் நாள் விருந்து செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என சுமார் 800 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், அன்று ஒரு நாள் விருந்து செலவு மட்டும் ரூ.50 கோடி வரை ஆகலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *