AI தொழில்நுட்பத்தால் உருவான முதல் Virtual பெண்.!

 

AI மூலம் உருவான நைனா அவ்தார் என்ற பெண்ணிடம் தங்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன. அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார். நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார்.

இந்தியாவில் முதல்முறையாக ஒடிசாவில் OTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தனர்.

பின்னர், இரண்டாவது முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கன்னட தொலைக்காட்சியான ‘பவர் டிவி’யில் கன்னட மொழியில் பேசும் ஏஐ செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பின்னணியில் சமூக வலைத்தளங்களில் ‘நைனா அவதார்’ என்ற இளம்பெண் வலம் வருகிறார். இவரிடம் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முன்னணி நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

இவர் உண்மையான பெண் அல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் பெண். இவரை உருவாக்கியவர்கள் நைனா அவதாரை வைத்து அதிகப்படியான வருமானம் பார்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

இவர், 2022 ம் ஆண்டில் இந்தியாவின் முதல் மெட்டா-இன்ஃப்ளூயன்சர் நிறுவனமான ‘Avtr Meta Labs’ மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆளுமை. இன்ஸ்டாகிராமின் படி நைனாவுக்கு 20 வயதாகிறது. சர்வதேச அளவில் பிரபலமான பல நிறுவனங்களுடைய பிராண்டுகளை விளம்பரப்படுத்தி வருமானம் பார்க்கிறார்.

நைக்கா, பூமா மற்றும் பெப்சி போன்ற பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்தது மட்டுமல்லாமல், இன்னும் பல நிறுவனங்களும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *