உலகில் பிரபலமாகும் ஆடைகளை அகற்றும் செயலிகள்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெண்கள் படங்களில் ஆடைகளை அகற்றும் செயலிகள், இணையத் தளங்கள் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த செப்டம்பரில் மட்டும் 24 மில்லியன் பேர் ஆடைகளை அகற்றும் இணையத் தளங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று சமூக கட்டமைப்பு பகுப்பாய்வு நிறுவனமான கிராபிகா கூறியுள்ளது.

பெரும்பாலான ஆடைகளை அகற்றும் அல்லது நிர்வாணமாக்கும் சேவைகள் சந்தைமயப்படுத்துவதற்காக பிரபல சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

உதாரணமாக, 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இத்தகைய ஆடைகளை அகற்றும் செயலிகளுக்கான விளம்பரத் தொடர்புகளின் எண்ணிக்கை 2,400 வீதத்துக்கு மேல் சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது.

அவற்றில் ‘எக்ஸ்’ என்று அழைக்கப்பட்ட டுவிட்டர், ரெடிட் ஆகிய சமூக ஊடகங்களும் உள்ளடக்கம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

இத்தகைய சேவைகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆடைகளை அகற்றி படங்களை மீண்டும் உருவாக்குகின்றன. பெரும்பாலான சேவைகள் பெண்களுக்கு மட்டுமே செயல்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *