சந்திரனில் யாரும் செல்லாத பகுதிக்கு சென்ற சீனா

சந்திரனில் யாரும் சென்றிறாத இருண்ட பகுதியான தென் துருவத்திற்கு சீனா (china)வெற்றிகரமாக விண்கலமொன்றை ஏவியுள்ளது.

இதன்போது, சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (China National Space Administration) முதன் முதலாக சந்திரனின் தென் துருவத்திற்கு சாங்’இ-6 (Chang’e 6) என்ற விண்கலத்தை இன்று ஏவியுள்ளது.

குறித்த விண்கலமானது, சீன மாகாணம் ஹைனானில் இருக்கும் வென்வாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-5 ஒய்8 (Long March 5) என்ற ரொக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது.

சாங்’இ-6 என்ற விண்கலமானது ஓர் ரோபோ விண்கலமாகும், இதன் மூலம் சந்திரனின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு மீண்டும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

china moon mission

அத்தோடு, சீனாவானது, 2030 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களையும் நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *