இலங்கை கிரிக்கெட் அணி தலைவருக்கு 3000 டொலர் அபராதம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷானக்கவுக்கு 3,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற தம்புள்ள ஆரா மற்றும் கழம்போ ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டியில் கள நடுவரிடம் கருத்து மோதலில் ஈடுபட்டமைக்காக தம்புள்ள ஆரா அணியின் தலைவர் தசுன் ஷானக்கவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தசுன் ஷானக்கவுக்கு போட்டி மத்தியஸ்தர் 3,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளார். இது அவரது போட்டி கட்டணத்தில் 40 சதவீதத்திற்கு சமமானது.

இந்த அபராதத்துடன் இரண்டு குறைபாட்டு புள்ளிகளும் உள்ளடங்குகின்றன.

தசுன் ஷானக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது எல்பிஎல் நடத்தை விதியின் 2.8 விதியை மீறுவதாகவும், நிலை 1 இற்கான குற்றமாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *