முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழப்பு!

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.

கிரிக்கெட் விமர்சகராக இருந்த டீன் ஜோன்ஸ், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணனையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்திய ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஜோன்ஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய மூலம் மிகவும் பிரபலமானார்.

மெல்போர்னில் பிறந்த டீன், 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 3631 ரன்கள் எடுத்திருந்தார்.

164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7 செஞ்சுரி மற்றும் 46 முறை 50கள் ரன் எடுத்து 6068 ரன்களை குவித்திருந்தார்.

டீன் ஜோனஸ் இறப்புக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டீனின் இறப்பு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டீன் கிரிக்கெட்டை மிகவும் விரும்பினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *