பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்க தீர்மானம்!

தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குறைப்பதற்காக பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்க அந்த நாடு முடிவெடுத்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை
தென்னாப்பிரிக்காவில் பாலியல் தொழில் குற்றமாக கருதப்படும் நிலையில், 1,50,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தென்னாப்பிரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் உலக அரங்கில் எச்.ஐ.வி வைரஸ் பாதிப்புகளால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முக்கிய இடத்தில் உள்ளது.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 1000 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 11 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாலியல் தொழில் இனி குற்றமல்ல
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாள்வதற்காக டிசம்பர் 9ம் திகதி நாட்டின் நீதி அமைச்சகம் புதிய சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.

அதனடிப்படையில் தென்னாப்பிரிக்காவில் பாலியல் தொழில் குற்றமற்றது எனவும், இனி சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சட்டம் தென்னாப்பிரிக்காவில் நிறைவேற்றப்பட்டால், இனி நாட்டில் பாலியல் சேவைகளை விற்பதும் வாங்குவதும் குற்றமாகாது, ஆனால் இந்த சட்டம் தற்போது பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்காவின் நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா, நாட்டில் பாலியல் தொழிலை குற்றமற்றதாக ஆக்குவதன் மூலம், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை குறைக்க முடியும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சிறந்த வேலை மற்றும் சுகாதார நிலைமைகளை பாலியல் தொழிலாளர்களுக்கு இது உருவாக்கும் எனவும் நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *