கணவனின் முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய பேஸ்புக் காதலன் தப்பி ஓடிய மனைவி!

திருமணமான இளம்பெண்ணொருவரின் பேஸ்புக் காதலன், அவரை சந்திப்பதற்காக வீடு தேடி செல்லும்போது, பேஸ்புக் காதலியின் கணவரின் முச்சக்கர வண்டியிலேயே வீட்டிற்கு சென்று இறங்கிய சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சுவாரஸ்ய சம்பவத்தின் முடிவு, இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது.

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

கொழும்பிற்கு அண்மையில் வசிக்கும் டில்ருவன் பெரேரா முச்சக்கடி வண்டி ஓட்டுனராக தொழில்புரிந்து வருகிறார். நடுத்தர வயதான அவர், திருமணத்திற்காக ஜோடி தேடிக் கொண்டிருந்தார்.

ஒரு நண்பர் மூலம், ஹோமாகம பகுதியிலுள்ள தக்ஷிலா என்ற 27 வயது இளம்பெண்ணை பற்றிய தகவலை அறிந்தார்.

தக்ஷிலா மிக அழகானவர். ஏற்கனவே திருமணம் முடித்து, சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று விட்டார். வீட்டிலேயே இருந்தார். அவர் அழகானவர் என்பதாலேயே பலர் திருமணம் செய்ய, காதலிக்க விரும்பினார். எனினும், ஏற்கனவே திருமணமாகி ஏற்பட்ட அனுபவத்தால், அவர் அவற்றை தவிர்த்து வந்தார்.

எனினும், அவரை இன்னொரு திருமணம் செய்யும்படி பெற்றோர் நச்சரித்து வந்தனர். பெற்றோரின் நச்சரிப்பு உச்சமடைந்து, திருமணமொன்று செய்யும் முடிவுக்கு வந்தார்.

இந்த சமயத்தில், தக்ஷிலாவின் வீட்டிற்கு, டில்ருவன் சென்றார்.

தக்ஷிலாவின் அழகில் மயங்கிய டில்ருவன், அவரை எப்படியாவது திருமணம் செய்ய விரும்பினார். எனினும், அதிக வயது வித்தியாசம் காரணமாக என்ன முடிவெடுப்பாரே என தெரியாமல் கவலையிலிருந்தார்.

எனினும், தக்ஷிலா வேறுவிதமாக யோசித்தார். இளம் ஆண்களில் அழகில் மயங்கி சென்று, ஏற்கனவே சந்தித்த மோசமான அனுபவத்தை சந்திக்க விரும்பவில்லை. டில்ருவன் நல்லவராக தோன்றுவதால், வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

விரைவிலேயே அவர்களிற்கு திருமணம் நடந்தது.

தக்ஷிலாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். மனைவியை அன்போடு கவனித்தார். அவருக்காக தனது முழு உழைப்பையும் செலவிட்டார். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் மோசமான அனுபவத்தை சந்தித்திருந்த தக்ஷிலா, இப்பொழுது நேரெதிரான அனுபவத்தை சந்தித்தார்.

ஆனால், கணவன் காலையில் முச்சக்கர வண்டியுடன் புறப்பட்டு விட்டால், அவருக்கு பொழுது போக்கு இல்லாமலிருந்தது. கணவர் காலையில் முச்சக்கர வண்டியை எடுத்து சென்றால், நகரில் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி, வாடகைக்கு ஆட்களை ஏற்றியிறக்குவார்.

கணினியில் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்தார். அதில், தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டார். திருமணம் பற்றிய எந்த தகவல்களையும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

60 வயது தாத்தா ஒருவர், நயன்தாரா படத்துடன் போலி முகப்புத்தக கணக்கை திறந்தாலே விட்டுவைக்காத இளைஞர்கள், உண்மையிலேயே அழகான இளம்பெண்ணொருவரை விட்டு வைப்பார்களா?

ஆளாளுக்கு ப்ரெண்ட் ரெக்குவெஸ்ட் கொடுத்து, புகைப்படங்களிற்கு சோ க்யூட் என கமண்ட்டுக்களையும் கண்ணை மூடிக்கொண்டு தட்டி விட்டனர்.

தக்ஷலா பேஸ்புக்கில் அரட்டையடித்து பொழுதைப் போக்கினார். பலருடன் பழகினார். பலர் காதல் வலை வீசினர். மாய உலகில் எல்லோருக்கும் மயக்கமூட்டிக் கொண்டிருந்தார்.

அதில் ஒரு இளைஞனை அவருக்கு பிடித்தது. அவருடன் அதிகமாகவே பழக்கினார். அது நாளடைவில் காதலாகியது.

பகலில் கணவர் வீட்டில் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி, சுதந்திரமாக பேஸ்புக் காதலனுடன் பேசி, பொழுதை கழித்தார்.

சில மாதங்களில், தக்ஷிலாவை நேரில் காண வேண்டுமென காதலன் அடம்பிடித்தார். ஆனால், லொக்டவுன் என்பதை காரணம் காட்டி தக்ஷிலா மறுத்து வந்தார். ஆனால் விடாக்கண்டனான காதலன், தக்ஷிலா வீட்டிற்கு வரப் போவதாக அடம்பிடித்தார். தக்ஷிலா எவ்வளவோ முயன்றார். காதலன் கேட்கவில்லை.

வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில் காதலனை அழைத்து பேசலாமென தக்ஷிலா முடிவெடுத்தார்.

அதன்படி, வீட்டு முகவரியை கூறி, மதியம் வருமாறு அழைத்திருந்தார்.

மறுநாள், தகஷிலாவின் வீட்டிற்கு அருகிலிருந்த நகரத்தை வந்தடைந்த பேஸ்புக் காதலன், முச்சக்கர வண்டியொன்றை அணுகி, குறிப்பிட்ட முகவரிக்கு செல்லுமாறு சாரதியிடம் கூறினார். சாரதிக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில், அவர்தான் தக்ஷிலாவின் கணவர்.

முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் தனது வீட்டிற்கு செல்வதால் சந்தேகமடைந்த அவர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இளைஞனை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். வழியில் இளைஞனிடம் பேச்சுக்கொடுத்தார்.

அழகான காதலியை சந்திக்கும் அவசரத்திலிருந்த இளைஞன், கொஞ்சம் அதிகமாகவே பீற்றிக் கொண்டு விட்டார்.

தனது காதலியை சந்திக்க செல்வதாகவும், இதுதான் முதலாவது சந்திப்பென்றும் சொல்லியுள்ளார்.

தனது மனைவியின் பேஸ்புக் காதலனே இவர், தான் இல்லாத சமயத்தில் மனைவி செய்த துரோகம் என்பவற்றை உணர்ந்த சாரதி, எதையும் வெளிக்காட்டாமல் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டு வாசலில் முச்சக்கர வண்டி நின்றது. சாரதி ஹோர்ன் அடித்தார். பேஸ்புக் காதலனை சந்திக்க தயாராகியிருந்த காதலி வெளியே வந்தார். அங்கு கணவனும், பேஸ்புக் காதலனும் ஒன்றாக வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரு விநாடி என்ன செல்வதென தெரியாமல் திண்டாடியவர், சட்டென வீட்டிற்குள் ஓடி, பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றார். அதே ஓட்டமாக வீதிக்கு சென்று, தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

பேஸ்புக் காதலி தலைதெறிக்க வீட்டுக்குள் ஓடிச் சென்றதால் திகைப்படைந்த, பேஸ்புக் காதலன் வீட்டுக்குள் சென்று பார்த்து விட்டு, குழப்பத்துடன் வெளியில் வந்தார்.

அந்த இளைஞன் தேடி வந்த பேஸ்புக் காதலியும், தனது மனைவியும ஒரே ஆள் தான என்பதை முச்சக்கர வண்டி சாரதி சொன்ன போது, அந்த இளைஞன் வெலவெலக்கத் தொடங்கினான்.

அந்த இளைஞனை எதுவும் செய்ய மாட்டேன் என கூறிய முச்சக்கர வண்டி சாரதி, அவர்களிற்குள் உறவு ஏற்பட்ட விதத்தை கேட்டறிந்து கொண்டார். திருமணமானதை மறைத்து தன்னிடம் காதல் உறவை வளர்த்ததை அந்த இளைஞன் சொன்னார்.

பின்னர், பேஸ்புக் காதலனை ஏற்றிச் சென்று நகரில் இறக்கி விட்டு, மனைவியின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு விபரீதம் ஏதோ உருவாகப் போவதாக நினைத்த மனைவி அறைக்குள் கதவை பூட்டி விட்டு இருந்து விட்டார்.

மனைவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தனக்கு துரோகமிழைத்ததை சுட்டிக்காட்டினார்.

மகளை வெளியே அழைத்த பெற்றோர், அவரது நடத்தையை கடுமையாக கண்டித்தனர். தமது மகள் சார்பில் மன்னிப்பு கோருவதாகவும், மனைவியை பிரிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். எனினும், மருமகன் அதை ஏற்க மாட்டார் என நினைத்தனர். எனினும், எதிர்பாராத ஒன்று நடந்தது.

“நீங்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டீர்கள். நீங்கள் அதை வேறு ஒருவருக்குச் செய்திருந்தால், நீங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பீர்களோ தெரியாது. நான் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறேன். ஆனால் இனிமேல் இது போன்ற எதையும் செய்ய மாட்டேன் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இனி பேஸ்புக்கிக்கும் பாவிக்க முடியாது. இதற்க சம்மதித்தால், என்னுடன் வாருங்கள்“ என கணவன் கூறினார்.

மனைவி மன்னிப்பு கேட்டு, கணவனின் நிபந்தனைக்கு சம்மதித்து வீடு திரும்பினார்.

கணவன்- மனைவி உறவில் ஒரு சிறிய விஷயத்திற்காகக் கூட கோபமடைந்து கொலை செய்யவும் தயங்காத போககு நிலவும் இன்றைய காலகட்டத்தில் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக அணுகுபவர்களும் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *