இலங்கையில் 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுயதனிமைப்படுத்தலில்!

இதுவரையில் நாடளாவிய ரீதியில் 67,000 பேரிற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
25,000 குடும்பத்தை ​சேர்ந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள யாரேனும் அததை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *