வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு!

பொதுத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1,420 ஆக இருந்ததாகவும், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் விரைவாக முடிவுகளை வழங்குவதற்காக இம்முறை அது 2,820 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி பிரதான வாக்கெண்ணும் வளாகங்களின் எண்ணிக்கை 71 என்றும், அந்த வளாகங்களில் உள்ள மொத்த வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை (வாக்கெண்ணும் மண்டபங்கள்) 2,820 ஆகும்.
ஒரு வாக்கெண்ணும் நிலையத்தில் 5,000-6,000 வாக்குகளைப் பெற ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முறையின் கீழ் 453 தபால்மூல வாக்குகளை எண்ணும் மையங்களும், 2,367 சாதாரண வாக்குகளை எண்ணும் நிலையங்களும் நிறுவப்படும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க 16,263,885 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அதற்காக 12,774 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து 3,652 வேட்பு மனுக்களும், சுயாதீன குழுக்களிடமிருந்து 3,800 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *