ஆயிரம் ரூபாவுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் தனிஒருவன்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (12) தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலையைச் சேர்ந்த கணேசன் உதயகுமார் என்பவரே ‘ எங்கள் இரத்தம் + எங்கள் கண்ணீர் + எங்கள் வியர்வை’ என எழுதப்பட்டிருந்த பதாதையை ஏந்தியவாறு – மிகவும் அமைதியான முறையில் இருமணிநேரம் போராட்டத்தை  முன்னெடுத்தார்.

” வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் திண்டாடிவருகின்றனர். யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதுபோலவே சம்பளம் வழங்கப்பட்டுவருகின்றது. எனவே, இம்முறையாவது கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக , தொழிலாளர்கள் கோரும் சம்பளம் வழங்கப்படவேண்டும்.

அதற்கு அரசியல்வாதிகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆகவேதான் எம்.பிக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் என்னால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது” என்று கணேசன் தெரிவித்தார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *