உலக கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு 84 ஆவது இடம்!

உலக நாடுகளில் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு தரப்படுத்தல் பட்டியலில், இந்த ஆண்டு இலங்கையின் கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தைப்  பெற்றுள்ளது.


ஆண்டு தோறும் Passportindex இணையத்தளம் வெளியிட்டு வருகின்ற தரவின் அடிப்படையிலேயே, இலங்கைக்கு இம்முறை இந்த இடம் கிடைத்துள்ளது
இந்த வகையில்,  இந்த வருடம் வெளியான இப்பட்டியலில் முதலாம் இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலாம் இடத்தையும், இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் நாடுகளும், மூன்றாவது இடத்தில் டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்ஷம்பெர்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், நோர்வே, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை கடந்த ஆண்டு 93 ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 9 இடங்கள் முன்னேறி 84 ஆவது இடத்தைப்  பெற்றுள்ளது.    அத்துடன்,  லெபனான் மற்றும் லிபியா நாடுகளும் 84 ஆவது இடத்தில் உள்ளன.

இலங்கையானது,  16 நாடுகளுக்கு விசா அற்ற வசதியை வழங்குவதுடன்,  21 நாடுகளுக்கு வருகைக்குப் பின்னர் விசா வழங்கும் சேவையை வழங்கி வருகின்றது. மேலும், 153 நாடுகளுக்கு இலங்கையில் விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,  அயல் நாடான இந்தியா 66 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 91 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *