மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராக மேற்குலகம் களத்தில்! – பதறுகிறார் கோட்டா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

மொரட்டுவையில் நடைபெற்ற எலிய அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

” மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே புதிய பிரதமரையும், அரசையும்  நியமித்தார்.அதற்கு  எதிராக மேற்குல நாடுகளின் தூதுவர்கள் செயற்படுகின்றனர். தமக்கு தேவையான ஜனாதிபதி, பிரதமரை நியமிக்கவே அவர்கள் முற்படுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு தலைதூக்கிய சக்திகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. அன்றுபோல் இன்றும்போலிப்பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றன.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டபோது அதை எம்.பிக்கள் முழுமையாக வாசித்தார்களா தெரியவில்லை. அவ்வாறு வாசித்திருந்தால் அப்படியானதொரு சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள்” என்றும் கோட்டாபய கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *