பொதுத்தேர்தலில் ஐ.தே.கவில் இணைந்து போட்டி! மேர்வின் அறிவிப்பு

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அமைச்சரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான மேர்வின் சில்வா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர். தூரநோக்குடன் செயற்படும் அரசியல்வாதி. எனவே, அவர் தலைமையில் செயற்படுவதற்கு விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக்கட்சி வாய்ப்பளிக்குமானால் அடுத்த பொதுத்தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியாக – அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவுக்கு கடந்தமுறை போட்டியிடுவதற்கு ஐ.ம.சு.முன்னணி வேட்புமனு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐ.தே.கவும் வழங்காது என்றே அக்கட்சிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *