30 ஆம் திகதிக்குள் ரூ. 1000 இல்லையேல் எம்.பி. பதவியை துறப்பேன் – தொண்டா சபதம்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் எம்.பி.பதவியை தான் இராஜினாமா செய்வார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு அறிவித்தார்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரச தரப்பிலிருந்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால், பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்றும், அரசுக்கு வழங்கப்படும் ஆதரவு மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் திகாம்பரமும், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும்  அறிவிப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

கடந்தமுறையும் ஒன்றரைவருட இழுத்தடிப்பின் பின்னரே சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இம்முறையும் அதற்கு இடமளிக்கமுடியாது. எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் உரிய தீர்வை தொழிலாளர்களுக்கு அதாவது 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எம்.பி. பதவியை இராஜினாமா செய்வேன்.
மக்களைவிட எமக்கு பதவிகள் முக்கியமல்ல. மக்களோடு மக்களாக வாழவே விரும்புகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *