நெடுஞ்சாலை, அதிவேகப்பாதைகளில் பயணிக்கும் சாரதிகளே இது உங்களுக்காக…

 

இலங்கையின் நெடுஞ்சாலைகள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதாவது, அந்நெடுஞ்சாலைகளில் வழமையை விட சாதாரண ஓட்டுனரொருவர், சாதாரண வாகனமொன்றில் வளைவுகள், மலைகள் மற்றும் சரிவுகளில் பாதுகாப்பாக செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ. அத்தகைய சாலையில் அதிகபட்ச சட்டரீதியான வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும்.

இது “போஸ்ட்டட்” வேகம் (Posted Speed) என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சாலைப்பயனாளர்களின் பாதுகாப்புத்தொடர்பில் இத்தகைய குறைந்த மதிப்பு வைக்கப்படுகிறது.

“ஸ்டாப்பிங் சைட் தூரம்” (Stopping Sight Distance) என்பது ஒரு வாகனம் அவ்வாகனத்திற்கு முன்னால் தடையாக இருப்பதைப்பார்த்த பிறகு முழுமையாக நிறுத்துவதற்குத் தேவையான தூரம். இந்த “ஸ்டாப்பிங் சைட் டிஸ்ட்டன்ஸ்” இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதலாவது “பிரேக் எதிர்வினை தூரம்.” (Brake Reaction Distance) இரண்டாவது “பிரேக்கிங் தூரம்”(Braking Distance).

“பிரேக் ரியாக்‌ஷன் தூரம்” (Brake Reaction Distance) என்பது வாகனம் முன்னோக்கிச் செல்லும் தூரமாகும். அது சாரதியின் கண் முன்னே ஒரு தடையாக இருப்பதைப்பார்த்து மூளைக்கு ஒரு செய்தியை “பிரேக்கை அடிக்கச் சொல்லும்”. AASHTO Guidelines வழிகாட்டுதல்களின்படி, சராசரிக்கும் குறைவான சாரதிக்கு (Below Average Driver) 2.6 வினாடிகளாகும்.

அதாவது, மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் வாகனம் பிரேக் அடிக்க முயலும் போது அது 69.5 மீட்டர் தூரம் பயணிக்கிறது. ஒரு இளம் ஓட்டுநர் என்றால், அது 42 மீட்டர் தூரம் போல் செல்கிறது.

பிரேக்கிங் தூரம் என்பது வாகனம் பிரேக்கை மிதித்தவுடன் வாகனம் முழுவதுமாக நிறுத்தப்படும் வரை அதை இழுக்கும் தூரமாகும். மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சராசரிக்கும் குறைவான வாகனத்திற்கு இது சராசரியாக 115 மீட்டர் தூரமாகும்.

அப்போது, ​​மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் போது திடீரென பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்த வேண்டுமென்றால், அதிகபட்சமாக 185 மீட்டர் தேவை. வாகனம் புதியதாக இருந்தால், சாரதி இளமையாகவும் விரைவாகச் செயல்படக்கூடியவராகவும் இருந்தால், இது சுமார் 100-120 மீட்டராகக்குறைக்கப்படும். மழை நாளாக இருந்தால் இந்த இழுபட்டு, வழுக்கிச்செல்லும் தூரம் இன்னும் அதிகரிக்கும்.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்காக அவ்விளக்கங்களுடன் இக்கதை தொடர்கின்றது.

நெடுஞ்சாலையின் இடது பாதையில் லொரிகள் மிக மெதுவாகவே செல்கின்றன. இவைகளைக்கடந்து செல்லும் சில வாகனங்கள், வலது பக்கமாக பாதையில் வரும் வாகனங்களை அசால்ட்டாக புறக்கணித்து விட்டு, உடனடியாக வலது பக்க பாதைக்கு நுழைகின்றன.

அப்போது அதிவேகமாக வரும் வாகனங்கள் அந்த இடத்தில் தரித்து நிற்கப்போதுமான நேரமிருக்காது. இதனால், பல விபத்துகள் நடக்கின்றன. அடுத்த விஷயம் என்னவென்றால், அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் தேவையான தூரத்தை பராமரிப்பதில்லை. இரண்டு வாகனங்களுக்கிடையே குறைந்தது 100 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும். அப்போது, ​​திடீரென உங்களுக்கு முன் வாகனமொன்று நின்றாலும், நீங்களும் உங்கள் வாகனத்தில் உள்ளவர்களும் அது பாதுகாப்பாக இருக்கும்.

மூன்றாவது, அதிவேக மின் விளக்குகள் இரவில் எரிவதில்லை. பொதுவாக இரவில் நம் வாகனத்தின் முகப்பு விளக்கின் (ஹெட் லைட் /Head Light)) யில் தெரியும் தூரத்தை மட்டுமே பார்க்க முடியும்.

எனவே, இரவில் நிறுத்தும் பார்வை தூரம் 180 மீட்டராக இருந்தாலும், ஹெட்லைட் அடிக்கும் இடத்தில் ஐம்பது முதல் அறுபது மீட்டர் வரையிலான தூரத்தில் மட்டுமே உங்களுக்கு முன்னாலுள்ள வாகனத்தை அல்லது ஒரு தடையாக இருப்பதைக்காணலாம்.

எனவே, நீங்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தால், உங்களுக்கு முன்னாலுள்ள வாகனத்தின் (Tail Light) “டெயில் லைட்கள்” வேலை செய்யவில்லை என்றால் அல்லது அவர்கள் மிக மிக மெதுவாகச்செல்கிறார்கள் என்றால், பாதைகளை மாற்றி மெதுவாகச்செல்ல உங்களுக்கு மிகக்குறைந்த தூரமும் நேரமும் இருக்கும்.

அதனால் இரவில் இவ்வாறான நிலைப்பாடுகள் மிகவும் மோசமாகவே உள்ளது. அதே நேரத்தில், இரவில் தூக்க மயக்கத்தில் செல்வதால் நமது “எதிர்வினை நேரம்” (Reaction Time) அதிகரிக்கிறது. அதே நேரத்தில், “பிரேக் எதிர்வினை தூரமும்”(Brake Reaction Distance) அதிகரிக்கிறது.

எனவே, இரவில் அதிக வேகமாகப்பயணிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். வீதி ஒழுங்குகளைக் கண்கானிக்கும் அதிகாரிகள் பின் வருவனவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. அதிவேகத்திற்கு குறைந்தபட்ச வேக வரம்பை நடைமுறைபடுத்த வேண்டும்.

2. பாதையில் உள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தினதும் (Tail Lights) “டெயில்லைட்களும் செயற்படுகின்றனவா? என்பதைச்சரி பார்க்க வேண்டும்.

3. இரவில் வீதி விளக்குகளை ஏற்றுவதற்கு சில தீர்வுகளை, வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சாரதிகளின் அவதானத்திற்கு,

1. முன்னால் செல்லும் வாகனத்திற்கு மிக மிக நெருக்கமாக அவ்வாகனத்தை முந்தி பயணிக்காதீர். சரியான பாதுகாப்புத் தூரத்தை பேணிக்கொள்ளுங்கள்.

2. அதிவேக பாதையில் இடது பக்கம் மணிக்கு 40 கிமீ வேகத்திற்கும் குறைவான வேகத்தில் செல்ல வேண்டாம். அப்படித்தான் செல்ல வேண்டுமென்றால் சாதாரண பாதையைப்பயன்படுத்தவும்.

3. முந்திச்செல்ல சரியான பாதையை (வலது) மட்டும் பயன்படுத்தவும். நீங்கள் ஒரு வாகனத்தை முந்திச் சென்றவுடன் குறிப்பிட்ட தூரத்திற்குப்பிறகு, இடது பாதைக்கு மீண்டும் திரும்பவும்.

4. லொறிகளில் பின்புற “கிராஷ் பார்களை (Crash Bar) நிறுவவும். அப்போது பின்னால் வந்து அடிபட்டால் வாகனத்தின் (Air Bag) “எயார்பேக்” ஒன் ஆகி (செயற்பட்டு) “கிராஷ் பாரில்” பின் பக்கமாக அடிக்கும் வாகனத்தில் பயணிப்போரின் தலையில் அடிபடாது.

5. “ஹெட்லைட்”, “டெயில்லைட்” மற்றும் “சிக்னல் லைட்” வேலை செய்கின்றதா? என மறக்கமல் சரி பார்க்கவும். அவற்றை முறையாக, சரியாகப் பயன்படுத்துங்கள். (வலது பக்கம் (Signal Light) சிக்னல் இட்டு இடது பக்கத்திற்கு போவது மாதிரி இல்லாமல் சரியாகப்பயன்படுத்துங்கள்) நீங்கள் ஒரு வாகனத்தை முந்திச்செல்ல அல்லது பாதைகளை மாற்ற வேண்டுமானால் உரிய “சிக்னல்” விளக்கைப் பயன்படுத்தவும்.

6. 100 kmph என்றால் 100 kmph க்கே செல்லுங்கள். அவசரப்பட்டு மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்லாதீர்கள். “அவசரத்திற்கும்” “இயற்பியலுக்கும்” எவ்வித சம்பந்தமோ அல்லது தொடர்போ இல்லை.

ஒவ்வொரு வேகத்திற்கும் ஏற்ப அவ்வாகனத்தை நிறுத்தத் தேவையான ஆகக்குறைந்த தூரங்கள் கீழே உள்ளன.

High Way பாதையோ அல்லது சாதாரண பாதையோ சரி மெதுவாக, பாதுகாப்பாகச்செல்லுங்கள். அவசரமென்றால் ஓரிரு மணித்தியாலங்கள் முன்கூட்டியே புறப்பட்டுச்செல்லுங்கள். ஏனென்றால், மரணம் எமது வாகனத்தை விட வேகமானது.

நன்றி – thehotLine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *