இனி வரும் ஆளுநர் ஆட்சி மிக மிக ஆபத்தான காலம்! – மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடவும் திட்டம் என விக்கி பகிரங்க எச்சரிக்கை

“மிகையான அதிகாரத்துடன் மத்திய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் அதன் முழுமையான அதிகாரம் தனது கைக்கு வரும் என்று காத்திருந்தவர் போல தற்போதைய ஆளுநரின் அண்மையச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. நான் முன்னர் எச்சரித்ததுபோல இனிவரும் காலம் ஆபத்தானது.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“எமது மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்றும் நடவடிக்கைகளும் பிழையாக வழிநடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றேன்.எமது மக்கள் விழிப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை காலவரையறை இன்றி பிற்போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது” என்றும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக் காலத்தின் இறுதி அமர்வு முதலமைச்சரின் பிறந்த தினமான நேற்று இடம்பெற்றது. இதில் முதலமைச்சர் நீண்ட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *