48ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கு அடியில் தூங்கும் Zombie Virus.,குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

 

48000 ஆண்டுகளாக பனிக்கு அடியில் மறைந்திருக்கும் Zombie Virus கொரோனா வைரஸை விட ஆபத்தான தொற்றுநோயை கொண்டு வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆர்க்டிக் மற்றும் பிற இடங்களில் உள்ள பனிக்கட்டிகளுக்கு அடியில் பேரழிவு தரும் வைரஸ்கள் புதைந்துள்ளன.

புவி வெப்பமடைதல் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருவதால், உறைந்த பனி உருகத் தொடங்கியது. இதனால் ஆபத்து அதிகரித்துள்ளது.

Arctic permafrost பனி உருகுவது ஜாம்பி வைரஸ்களை வெளியிடக்கூடும் தகவ்கள் தெரிவிக்கின்றன. இது கொரோனா காலத்தில் காணப்பட்ட அதே நிலைமைக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த வைரஸின் அபாயங்களை நன்கு புரிந்து கொள்ள, கடந்த ஆண்டு Jean-Michel Clavery எனும் விஞ்ஞானி சைபீரியன் permafrostல் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து சில வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்தார். இந்த வைரஸ்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தில் உறைந்துள்ளன.

Aix-Marseille பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணரான Jean-Michel Clavery, ‘தற்போது, ​​தொற்றுநோய் அபாயங்கள் பற்றிய பகுப்பாய்வு தெற்குப் பகுதிகளில் தோன்றி வடக்கே பரவக்கூடிய நோய்களில் கவனம் செலுத்துகிறது.

வடக்கில் தோன்றி தெற்கிலும் பரவிய நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை, இது பிழையென நான் நம்புகிறேன். வடக்கில் ஒரு புதிய தொற்றுநோயைத் தொடங்கக்கூடிய வைரஸ்கள் உள்ளன.” என்று கூறுகிறார்.

ஒரு பாரிய தொற்றுநோய் வரலாம்
ரோட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தின் விஞ்ஞானி மரியன் கூப்மன்ஸ் இதனை ஒப்புக்கொள்கிறார்.

‘permafrost-இல் எந்த வைரஸ்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் யாரோ ஒரு வைரஸைத் தூண்ட முடியும் என்பது மிகப்பாரிய ஆபத்து என்று நான் நினைக்கிறேன். ஒரு பாரிய தொற்றுநோய் வரலாம். அது எதுவாக இருந்தாலும். இது போலியோவின் பண்டைய வடிவமாக இருக்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிரந்தர உறைபனியில் புதைக்கப்பட்டிருந்தாலும் உயிருள்ள வைரஸ்கள் ஒற்றை செல் உயிரினங்களை பாதிக்கலாம். இதை 2014 இல் சைபீரியாவில் Clavery தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நிரூபித்தது.” என்று கூறியுள்ளார்.

48,500 ஆண்டுகள் பழமையான வைரஸ்
கடந்த ஆண்டு விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட தகவல்கள், ஏழு வெவ்வேறு சைபீரிய இடங்களில் இருந்து பல வைரஸ்கள் தொற்றுநோயைப் பரப்பும் திறன் கொண்டவை என்று தெரியவந்தது.

ஒரு வைரஸ் மாதிரி 48,500 ஆண்டுகள் பழமையானது. “நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்கள் அமீபாக்களை மட்டுமே பாதிக்கும் திறன் கொண்டவை, அவை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை” என்று கிளேவரி கூறினார்.

ஆனால் தற்போது பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்திருக்கும் வைரஸ்கள் அவ்வாறு செய்ய முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. வடக்கு அரைக்கோளத்தின் ஐந்தில் ஒரு பகுதி நிரந்தர பனியால் மூடப்பட்டிருக்கும். இது ஒரு Time Capsule போன்றது, பல பழங்கால உயிரினங்களின் எச்சங்களுடன் Mummified வைரஸ்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *