மகேந்திரனுக்குப் பிடியாணை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபயக்கோன், சம்பத் விஜயரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்தப் பிடியாணை நேற்றுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிடியாணையை ஆங்கிலத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆவது பிரதிவாதியான அஜஹான் கார்திய புஞ்சிஹேவா எனும் நபர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகமல் சிங்கப்பூரில் இருக்கின்றார் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும், எனவே, அவருக்குப் பிடியாணை பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வேண்டி இருந்தார்.

இதனடிப்படையில் அந்த நபருக்குப் பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம் அது தொடர்பான அறிக்கை டிசம்பர் 4ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *