புத்தாண்டை முதலாவதாக வரவேற்ற பசிபிக் நாடு!

 

பசிபிக் நாடான Kiritimati atoll புத்தாண்டை முதலாவதாக வரவேற்றுள்ளது. இரண்டாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது.

புத்தாண்டை வரவேற்ற பசிபிக் தேசம்
நியூசிலாந்தை அடுத்து டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன. அத்துடன் பல மில்லியன் மக்கள் வரும் மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உலக அளவில் மிகவும் கொண்டாடப்படும் புத்தாண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் கூடிவருகின்றனர். மொத்தம் 12 நிமிடங்கள் நடைபெறும் இந்த வாணவேடிக்கை 8 டன் அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

33 தீவுகள் சேர்ந்தது தான் Kiribati என்ற குட்டி நாடு. கிழக்கிலிருந்து மேற்காக கிட்டத்தட்ட 4,000 கிமீ மற்றும் வடக்கிலிருந்து தெற்கே 2,000 கிமீக்கு மேல் பரப்பளவு கொண்டது இந்த நாடு. 1979ல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.

இதில் பெரும்பாலான தீவுகள் மக்கள் வாழ தகுதியற்றவை என்றும், கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், அங்கு மக்கள் வசிக்க அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஃபிஜி அரசாங்கத்திடம் உணவுக்கும் உறைவிடத்திற்கும் அனுமதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *