விசிட்டிங் விசாவை இனி Work Permit-ஆக மாற்ற இயலாது

ஓமன் நாட்டில் இனி விசிட்டிங் விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அதனை வேலை விசாவாக (Work Permit) மாற்ற முடியாது.

ஓமனில் விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன. விசிட்டிங் விசா அல்லது டூரிஸ்ட் விசாவில் ஓமனில் இருப்பவர்கள் வேலை விசா அல்லது குடும்ப விசாவிற்கு மாற முடியாது என்று ராயல் ஓமன் காவல்துறை (ROP) தெரிவித்துள்ளது.

இப்படி மாற விரும்புபவர்கள் நாட்டை விட்டு வெளியேறி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த புதிய உத்தரவு அக்டோபர் 31 செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

Oman suspends conversion of tourist visa to work visas, oman entry permit, Oman new Visa Rules, Royal Oman Police

ஓமனில் முன்னதாக, பயணிகள் டூரிஸ்ட் அல்லது விசிட் விசாவில் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் அதை வேலை விசாவாக மாற்றிக்கொள்ளலாம். அந்த வசதி தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேசத்துக்கு புதிய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், வேலை மற்றும் குடியிருப்பு விசாவில் தற்போது ஓமனில் இருக்கும் வங்கதேச பிரஜைகள் புதுப்பிக்கப்படுவார்கள். இந்த புதிய முடிவுக்கான காரணத்தை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *