இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் சற்றும் நகராமல் உள்ள ஜெருசலேமின் ஏணி

கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெரூசலேமில் உள்ள ஏணிப்படி சுமார் 270 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட நகராமல் ஒரே இடத்தில் காணப்படுகிறது.

இதன் பின்னணியை ஆராயும் போது அந்த தகவல்கள் சுவாரசியம் அளிக்கின்றன.

புனித நகரமான ஜெரூசலேம் இஸ்ரேலின் தலைநகராக விளங்குகிறது, இங்குள்ள பழம் பெரும் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாகவும், பின்னர் அவர் அங்கு மறு பிறவி எடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்புக்கள் உடைய இந்த இடத்தினை,  இந்த இடத்தை கல்வாரி மலை என்ற பெயர் கொண்டும் செபுல்கர் என்று இன்னொரு பெயர் கொண்டும் இந்த தேவாலயம் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்தவத்தின் ஆறு பிரிவுகளும் ஒன்றாக சேர்ந்து இந்த தேவாலயத்தை நிர்வகிக்கின்றன, இதில் ரோமன் கத்தோலிக்க, கிரேக்க ஆர்த்தடொக்ஸ் பேட்ரியார்ச்சேட், ஆர்மேனியன் பேட்ரியார்ச்சட் மற்றும் எத்தியோப்பியன் மற்றும் காப்டிக் சிரிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் அடங்குகின்றன.

இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் சற்றும் நகராமல் உள்ள ஜெருசலேமின் ஏணி : காரணம் இதுதான்! | Israel Hamas War Jerusalem Church Immovable Ladder

கிறிஸ்தவர்களைத் தவிர, முஸ்லிம்களுக்கும் ஜெருசலேம் மிகவும் முக்கியமானது, இஸ்லாமிய மதத்தின் மூன்றாவது புனித தலமான மசூதியான அல்-அக்ஸாவும் இங்குதான் அமைந்துள்ளது, இது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளையால் பராமரிக்கப்படுகிறது.

அதேபோல், யூதர்களின் புனித ஸ்தலமான ‘பரிசுத்த ஸ்தலமும்’ இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

17-18 ஆம் நூற்றாண்டில் புனித செபுல்கர் தேவாலயம் தொடர்பாக கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே நிறைய சர்ச்சைகள் காணப்பட்டன.

ஹஃப்போஸ்ட்டின் அறிக்கையின்படி, அந்த நேரத்தில் ஜெருசலேம் உஸ்மானியா சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகள் இந்த தேவாலயத்திற்கு உரிமை கோரியபோது, ​​​​உஸ்மானியா சுல்தான் நிர்வாகம், ‘அன்றைய நிலைமையை’ பராமரிக்க உத்தரவிட்டது என்றும் அதனால் அன்று முதல் இன்று வரை அதே நிலைதான் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் சற்றும் நகராமல் உள்ள ஜெருசலேமின் ஏணி : காரணம் இதுதான்! | Israel Hamas War Jerusalem Church Immovable Ladder

இதன்படி 1750 ஆம் ஆண்டு தேவாலயத்தின் ஒரு ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று ஒரு இன்ச் கூட நகர்த்தப்படாமல் இன்றுவரை உள்ளது.

இந்த ஏணிக்கும் பல பிரிவினரும் உரிமை கொண்டாடுவதனால், 270 ஆண்டுகள் கடந்தும் இந்த ஏணியை அகற்ற யாருக்கும் துணிவு வரவில்லை.

தற்போது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையே நடந்து வரும் மோதல்கள் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் அசைக்கப்படாமல் இருக்கும் ஏணி இந்த கலவரத்தின் போதும் யாராலும் தொடப்படாமல் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *