YouTube 1.9 மில்லியன் வீடியோக்களை அகற்றியது!

 

உலகளவில் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான யூடியூப், இந்தியாவில் மட்டுமே இந்த ஆண்டு (2023) ஜனவரி – மார்ச் காலாண்டில் சுமார் 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அதன் பிளாட்ஃபார்மிலிருந்து நீக்கியுள்ளது.

வேறு எந்த ஒரு நாட்டிலும் youTube-ல் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்களை விட இந்த எண்ணிக்கை அதிகம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யூடியூபின் Community Guidelines மீறப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூகுளுக்கு சொந்தமான YouTube கூறி இருக்கிறது. விதி மீறல்கள் காரணமாக சர்வதேச அளவில் 6.48 மில்லியன் வீடியோக்களை வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான யூடியூப் அகற்றியுள்ளது.

YouTube-ன் “Community Guidelines Enforcement’ அறிக்கையானது இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் பெற்ற புகார்களின் வகைகள் மற்றும் அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றிய தகவலை வழங்குகிறது. இந்த அறிக்கையில் தான் ஜனவரி – மார்ச் மாதங்களுக்கு இடையில் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களையும், அமெரிக்காவில் 6.54 லட்சம் வீடியோக்களைம், ரஷ்யாவில் 4.91 லட்சம் வீடியோக்களையும், பிரேசிலில் 4.49 லட்சம் வீடியோக்களையும் நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே போல தங்களின் Spam கொள்கைகளை மீறியதற்காக இதே காலகட்டத்தில் சுமார் 8.7 மில்லியனுக்கும் அதிகமான சேனல்களை நீக்கியதாகவும் இதில் ஸ்கேம்கள், தவறாக வழிநடத்தும் மெட்டாடேட்டா அல்லது thumbnails, வீடியோ மற்றும் கமெண்ட்ஸ் ஸ்பேம் ஆகியவை அடங்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 853 மில்லியனுக்கும் அதிகமான கமெண்ட்ஸ்களை நீக்கியதாகவும் இவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் என்றும் கூறப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட கமெண்ட்ஸ்களில் சுமார் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆட்டோமேட்டிக்காகவே கண்டறியப்பட்டவை எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு நிறுவனமாக ஆரம்ப நாட்களில் இருந்தே, எங்களின் Community Guidelines-கள் தீங்கு விளைவிக்கும் கன்டென்ட்ஸ்களில் இருந்து யூடியூப் கம்யூனிட்டியை பாதுகாத்து வந்துள்ளது. தற்போது YouTube-ஐ பயன்படுத்தும் பெரும்பான்மையான கிரியேட்டர்கள் நல்ல கன்டென்ட்ஸ்களை அப்லோட் செய்து வருகிறார்கள், எங்கள் கொள்கைகளை மீறுவதில்லை. எனினும் எங்கள் பாலிசிகளை தற்செயலாக மீறும் கிரியேட்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு educational efforts முயற்சியின் மூலம் பலன் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று YouTube கூறி இருக்கிறது.

யூடியூப்-ல் இருந்து அகற்றப்பட்ட வீடியோக்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமான வீடியோக்கள் மனிதர்களைக் காட்டிலும் இயந்திரங்களால் முதலில் flagged செய்யப்பட்தையும் நிறுவனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. Machine-கள் மூலம் flagg செய்யப்பட்ட வீடியோக்களில், சுமார் 38% வீடியோக்கள் சிங்கிள் வியூ பெறுவதற்கு முன்பே அகற்றப்பட்டதாகவும், சுமார் 31% வீடியோக்கள் அகற்றப்படுவதற்கு முன்பு 1 முதல் 10 வியூஸ்களை பெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டில், YouTube முதல் முறை நிகழும் கொள்கை மீறலுக்கு ஒன்-டைம் வார்னிங்கை வழங்க தொடங்கியது, இது அதிக அபராதங்களை எதிர்கொள்ளும் முன், என்ன தவறு நடந்துள்ளது என்பதை மதிப்பாய்வு செய்யும் வாய்ப்பை கிரியேட்டர்ஸ்களுக்கு வழங்கியது. இதனை தொடர்ந்து தற்போது ஒன்-டைம் வார்னிங் பெறுவோரின் சுமார் 80% கிரியேட்டர்கள் மேம்படும் பாலிசி வைலெஷனில் ஈடுபடுவதில்லை என்கிறது நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *