இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9700 பேர் தற்கொலை!

கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் 2832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இது 83% ஆகும். பொருளாதாரச் சிக்கல்களால், 2022ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது. இது 5.06% ஆகக் காட்டப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 593 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது 17.04% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 274 பேர் போதைக்கு அடிமையானவர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 8% ஆகும். மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 412 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது 12% ஆகும்.

2023ஆம் ஆண்டு தொடர்பான தற்கொலைத் தரவுகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சினால் பெறமுடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரிக்க நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உதவியதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *