கோட்டா தொடர்பில் நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் சேதன பசளைத் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பினரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உரத் திட்டம்

கோட்டாபய தொடர்பில் நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Gotabaya Namal Fertilizer Scheme Sl

இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில்,

“கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரத் திட்டமே தோல்விகளுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

போராட்டத்தை வழிநடத்திய மூன்றாம் தரப்பினர் தொடர்பில் எனக்கு சந்தேகம் உள்ளது.

விவசாய குடும்ப பின்னணியை கொண்ட தலைவரான டி.ஏ.ராஜபக்ஷவின் மகன் உரத்திற்கான நிவாரணத்தை ஒரு போது நிறுத்தியிருக்க மாட்டார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *