உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் 3.20 கோடி பேருக்கு தொற்று; 9.81 லட்சம் பேர் பலி; 2.36 கோடி பேர் ஓகே; உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!!07:50 am Sep 24, 2020 | dotcom@dinakaran.com(Editor)   
இந்தியா மரணவிசாரணை
ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 275 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 74 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 354 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 81 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 58 ஆயிரத்து 120 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா – 45,87,614
அமெரிக்கா – 43,88,037
பிரேசில் – 39,92,886
ரஷியா – 9,23,699
கொலம்பியா – 6,62,277
பெரு – 6,36,489
தென் ஆப்ரிக்கா – 5,94,229

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,06,560
பிரேசில் – 1,39,065
இந்தியா – 90,020
மெக்சிகோ – 74,348
இங்கிலாந்து – 41,862
இத்தாலி – 35,758
பெரு – 31,870
பிரான்ஸ் – 31,459
ஸ்பெயின் – 31,034
ஈரான் – 24,840
கொலம்பியா – 24,746

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 71,39,036
இந்தியா – 56,46,011
பிரேசில் – 46,27,780
ரஷியா – 11,22,241
கொலம்பியா – 7,84,268
பெரு – 7,84,268
மெக்சிகோ – 7,05,263
ஸ்பெயின் – 6,93,556
தென் ஆப்பிரிக்கா – 6,65,188
அர்ஜெண்டினா – 6,64,799

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *