நடிகையை 4ஆவது முறையாக திருமணம் செய்யும் 62 வயது பிரபல நடிகர்!

தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகையை நான்காவது திருமணம் செய்யவுள்ளதை 62 வயதான நடிகர் உறுதி செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார்.
திருமண அறிவிப்பு
தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இதனை தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் அறிவித்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை பவித்ராவை முத்தமிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ரசிகர்களில் ஒரு தரப்பு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தாலும் மற்றொரு சாரார் அவர்களை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டுள்ளனர்.