பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக கடல் பயணத்தை மேற்கொண்ட 45ஆயிரம் அகதிகள்!

பிரித்தானியாவுக்கு  2022 ஆம் ஆண்டில் 45,000 இற்கும் அதிகமானோர் கடற்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

பிரான்சின் கலே மற்றும் அதை அண்மித்துள்ள கடற்பகுதிகளில் இருந்து பிரித்தானியாவின் டோவர் பகுதிக்கு ஆங்கிலக்கால்வாய் ஊடாக அகதிகள் சட்ட விரோதமாகச் செல்ல முயற்சி செய்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இந்த பயணங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு  45,000 இற்கும் அதிகமானோர் இந்த பயணத்தை முயற்சித்துள்ளனர்.

மொத்தமாக 45,756 அகதிகள் சட்டவிரோதமான சிறிய மீன்பிடி படகுகளில் ஆங்கில கால்வாயூடாக பயணித்துள்ளனர்.

இவர்களில் கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் 1,295 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டில் 28,526 பேர் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். அது அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்ட நிலையில், சென்றவருடம் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *