இலங்கை அரச நிறுவனங்களால் 86,000 கோடி ரூபா நஷ்டம்!

இலங்கை அரச நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 52 பிரதான அரச நிறுவனங்கள் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் இந்த அரசு நிறுவனங்களால் ஏற்பட்ட இழப்பு 86,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது 2021 ஆம் ஆண்டில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட மொத்த இழப்பை விட அதிகமாகும்.

அரச நிறுவனங்களில் 32 ஊழல் நிறுவனங்கள் உள்ளதாக கோப் குழு அண்மையில் தெரிவித்தது.

அதன் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த 32 நிறுவனங்களின் இழப்பு 46500 கோடி ரூபாவாகும்.

அந்த நிறுவனங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன அதிக நட்டத்தை சந்திக்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களில் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 30,000 கோடி ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.62இ800 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.

அப்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 24இ800 கோடி ரூபாவும், இலங்கை மின்சார சபை 4700 கோடி ரூபாவும் இழந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *