அரசாங்கத்தை கலைக்க ஜனாதிபதி தயாராகிறார் விரைவில் பொதுத் தேர்தல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கலைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்துவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை அப்படியே தொடர ஜனாதிபதி விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்தாமல் தொடர ஜனாதிபதி தயாரில்லை எனவும் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைத்து நிலைமை சீரடைந்த பின்னர், சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

தேர்தலுக்கு செல்லும் முன் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். 

இந்தத் தருணத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படும் எனவும், அவ்வாறு பணம் செலவழிக்க இது சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட, ஜனாதிபதி எதையாவது செய்ய முயற்சிக்கிறார் என்றும், எனவே செயற்பாட்டாளர்களின் இலக்கு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ளுமாறும், ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிகொத்த தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *