ஐரோப்பிய நாடுகளில் இன்று முதல் நேர மாற்றம்!

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இன்று அதிகாலை முதல் குளிர் கால நேரம் மாற்றமடைந்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் காலமாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் குளிர் காலங்களில் ஒரு மணி நேரம் குறைக்கப்படும். 

அதற்கமைய, இன்று அதிகாலை 3 மணிக்கு ஒருமணி நேரம் குறைக்கப்பட்டு, 2 மணி என நேரமாற்றம் செய்யப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்திற்கு முன்பு ஒருமுறையும் குளிர்காலத்திற்கு முன் ஒருமுறையும் நேர மாற்றம் செய்யப்படுகிறது.

அதற்கமைய, தொழில்நுட்ப ரீதியாக ஒரு மணிநேரத்தை சோமிக்க முடியும். ஆனால் மாலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இருளடைய தொடங்கிவிடும்.

கையடக்க தொலைபேசி போன்ற பெரும்பாலான மின்னணு சாதனங்கள் தானாகவே மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஏனைய கடிகாரங்களின் நேரத்தை மக்கள் முறையாக மாற்ற வேண்டும்.

கோடை காலத்தில் சூரியன் அதிகாலையிலே உதிப்பதால் ஒரு மணி நேரம் அதிகரிப்பதன் மூலம், அந்த ஒருமணிநேரம் தூங்குவதை குறைத்து, இயற்கை வெளிச்சத்தில் மக்கள் தங்கள் காலை வேலைகளை செய்ய வழி செய்யப்பட்டது.

உதாரணமாக காலை 6 மணிக்கு எழுநதிருக்கும் ஒருவர், கோடையில் நேர மாற்றத்தினால் 5 மணிக்கு எழுந்திருப்பார் . சூரியன் ஏற்கனவே உதித்திருந்ததால் அவர் மின் விளக்குகளை போட தேவை இல்லை. எனினும் இதனை முடிவுக்கு கொண்டு வரும் நடைமுறையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு இந்த நேர மாற்றம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *