இலங்கை தொடர்பில் வெளியான ஆய்வறிக்கை!

நாட்டின் மீதான மக்களின் திருப்தி 2 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக தனியார் நிறுவனமொன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘தேசத்தின் மனநிலை’ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது நாட்டின் மீதான மக்களின் திருப்தி 6 வீதமாகக் காணப்பட்ட நிலையில், ஜுன் மாதத்தில் 2 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஜனவரி மாதம் 10 வீதமாகக் காணப்பட்ட அரசாங்கத்தின் மீதான விருப்பம் ஜுன மாதத்தில் 3 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மறை 86 வீதத்தில் இருந்து மறை 96 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச நியமங்களுக்கு அமைய ஆயிரத்து 52 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *