எதிர்வரும் வாரங்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!

ஒமைக்ரான் வைரஸால் வரும் வாரங்களில், ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்க நேரிடும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Omicron வைரஸ், இப்போது உலகில் சுமார் 39-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

குறிப்பாக டெல்டா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இந்த Omicron வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கும், விமானங்களுக்கும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு, வரும் வாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில், இந்த ஒமைக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரிக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும், உயிரிழப்பும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் ஆன்ட்ரியா அமான், இது குறித்து கூறுகையில், வரும் வாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்குலாம்.

மருத்துவமனைகல், ஐசியூவில் அனுமதிகப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம். எனவே, மக்கள் அதிகம் கூடும் மதுபார்கள், ஹோட்டல்கல் போன்றவற்றை மூடி கட்டுப்பாடுகள் விதிப்பதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதும் அவசியம். இல்லையெனில், ஒமைக்ரான் வைரஸால் ஒட்டுமொத்தச் சூழலும் கவலைக்கிடமாக மாறக்கூடும்.

ஐரோப்பாவை பொறுத்தவரை தற்போது 19 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. இதனால் 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை இந்த நோயால் ஒருவரும் உயிரிழக்கவில்லை, அது ஒரு நல்ல விஷயம், இருப்பினும் தொடக்க நிலையின் சூழலை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *