மிட்செல் ஸ்டார்க் 85 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்!

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி,.கேப்டனாக முதல் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் , இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸை ஆஸி., பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் போல்ட் செய்து விக்கெட் எடுத்ததால் , 1936 ஆம் ஆண்டிற்குப் பின் 85 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் புரிந்திருக்கிறார் மிட்சல் ஸ்டார்க்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *