அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர்களுக்கிடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அந்த பாதுகாப்புத் துறை நிபுணர் கூறியதாவது, ”இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.

காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.

முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு

சுமார் ஒரு லட்சம் வீரர்கள், 2 லட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன.

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை | 3Rd World War Defense Expert Warns Israel War

இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *