உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் விண்வெளி ஏவுதல் இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

நிலவின் சுற்றுப்பாதையில் சோதனை ஏவுதலுக்காக செலுத்த திட்டமிட்டு இருந்த உலகின் மிக சக்திவாய்ந்த ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் ஏவுதல் ஹைட்ரஜன் கசிவு காரணமாக இறுதி நேரத்தில் ஒத்துவைக்கப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் உருவாக்கப்பட்ட உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டான ஆர்ட்டெமிஸ்-1(artemis-1) திட்டம், செய்வாய் கிரகத்திற்கான பயணங்களுக்கு ஒற்றை படிக்கல்லாகவும், சந்திரனில் மீண்டும் மனிதர்களை ஒருமுறை கால்பதிக்க வைப்பதற்கான நோக்கத்தையும் கொண்டது.

இதன் சோதனை ஓட்டமாக நிலவின் சுற்றுப்பாதையில் 42 நாட்கள் நிலைநிறுத்தும் திட்டத்திற்காக ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்தநிலையில் ராக்கெட் புறப்படுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, திரவ ஹைட்ரஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ட்டெமிஸ்-1 இன்று ஏவுதலை தவறவிட்ட பின்னர், கேப் கனாவெரலில் இருந்து வெள்ளிக்கிழமை ஏவப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக நாசா (NASA) கூறியுள்ள தகவலில், ஆர்ட்டெமிஸ் 1 ​​ஐ ஏவுவதற்கான முயற்சியை ஏவுகணை இயக்குனர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் ஸ்க்ரப் அழைப்பு விடுத்தார், ஆனால் எஞ்சினில் ஏற்பட்ட ஹைட்ரஜன் கசிவினால் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இந்த சிக்கலை தற்போது சரிசெய்ய முடியவில்லை, இருப்பினும் ராக்கெட் தற்போது நிலையான கட்டமைப்பில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

98-மீட்டர் விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) நாசா இதுவரை உருவாக்கிய மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும், மேலும் இந்த முக்கியமான சோதனை கட்டத்தில் இது மனிதர்களுக்காக கட்டப்பட்ட எந்த விண்கலத்தையும் விட அதிகமாக பறக்கும்.

மெகா ராக்கெட்டின் 8.8 மில்லியன் பவுண்டுகள் உந்துதல் விண்வெளி விண்கலத்தை விட 13% அதிகமாகவும், அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்பட்ட சாட்டர்ன் V ராக்கெட்டை விட 15% அதிகமாகவும் உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, இரண்டு பூஸ்டர்கள் ஒவ்வொன்றும் 14 நான்கு-இயந்திர வணிக விமானங்களை விட அதிக உந்துதலை உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *