இலங்கையில் பால்மா தட்டுப்பாடு மேலும் நீடிக்கும் அபாயம்!

இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாயில் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் விலை உயர்வு ஏற்படவில்லை என்றால், பால் மா விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மேலும் ஒரு மாதமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் உள்ள பால்மாவை விரைவில் விடுக்கவில்லை என்றால் விரைவில் பழுதடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்போது கடைகளில் பால்மா கோரிக்கைக்கமைய நூற்றுக்கு 10 வீதம் மாத்திரமே உள்ளதென பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையால் பால் மா இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மிகப்பெரிய அளவு பால் மா கொள்கலன்களை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா கொள்கலன்களை விடுவிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ள போதிலும் கொடுப்பனவுகள் செலுத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டொலருடன் ஒப்பிடும் போது பால் மாவின் விலையை 200ரூபாயில் அதிகரித்தால் பாரிய நட்டம் ஏற்படுவதனால் 350 ரூபாயில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். எனினும் இந்த நிலைமைக்கு மத்தியில் மீண்டும் 6 மாதங்களிலேயே விலை அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *