ரமழானில் பள்ளிவாயல்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் வெளியீடு!

இன்று (14) நாட்டில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு நாட்டில் உள்ள பள்ளிவாயல் நிர்வாக சபைகளுக்கு சுகாதார அமைச்சு கோரிக்கை முன்வைத்துள்ளது.

  1. ரமழான் மாதத்தில் பெரியவர்கள் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மட்டுமே தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

2 . பள்ளிவாயல்களின் வெளியே கூட்டம், நுழைவாயல்கள் போன்றவற்றில் தங்கி இருக்கக்கூடாது.

  1. நுழைவாயில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் தரை அடையாளங்கள் இருக்க வேண்டும்.
  2. நபர்களின் உடல் ரீதியான தூரத்தை உறுதிப்படுத்த வேண்டும். நுழைய அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொழும் இடங்களில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டும்.
  3. தொழுகையில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும்.
  4. சொந்த முஸல்லா எனும் விரிப்பை எடுத்துவருதல் வேண்டும்.
  5. பிரார்த்தனை மண்டபத்தின் நபர்களுக்கு ஏனையவர்களை கடந்து செல்லாதவாறு பள்ளிவாயலில் இருந்து வெளியேற போதுமான இடத்தை வழங்கவும்.
  6. பள்ளிவாயல் பணியாளர்கள் பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிதல் வேண்டும். (முகக்கவசம், கவரல்,தலைக்கவசம் மற்றும் கையுறை)
  7. பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த பணியாளர்கள் பள்ளிவாயலினுள் நுழைவரது வெப்பநிலை சோதிக்க வேண்டும்.
  8. அனைத்து நபர்களும் மூக்கு மற்றும் வாயைமூடும் வண்ணம் சுத்தமான முகக்கவசத்தை அணிய வேண்டும்.மேலும் ஒழுங்காக கைகளை சுத்தம் செய்யாமல் முகக்கவசத்தை தொடக்கூடாது.
  9. நுழைவாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்.
  10. ஒவ்வொரு வழிபாட்டாளரும் தங்கள் கைகளை சரியாக சுத்தம் செய்தபின்பள்ளிவாயலினுள் நுழைய வேண்டும்.
  11. வெவ்வேறு இடங்களில் சனிடைஸர்களை வைக்க வேண்டும்.
  12. அனைவரும் கைக்குலுக்குதல் அல்லது வேறு எந்த வகையான உடல் தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும்.
  13. கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை (கண், மூக்கு அல்லது வாய்) தொடக்கூடாது.
  14. பள்ளிவாயலுக்குள் நுழையும் அனைவரும் சுவாச ஆசாரங்களை கடைபிடிக்க வேண்டும் (இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கு போன்றவற்றை மூடிக்கொள்ள திசுக்களைப் பயன்படுத்துதல். மேலும் அதனை முறையாக கழிவுத் தொட்டியில் இடுதல் வேண்டும்.
  15. மொபைல் போன்கள் / பேனாக்கள் / பிற தனிப்பட்ட பொருட்களை வேறொருவருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்.
  16. குர்ஆன் அல்லது வேறு எந்த வெளியீடுகளையும் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
  17. பள்ளிவாயல்களில் ‘கஞ்சி’ விநியோகிக்கக் கூடாது.
  18. பள்ளிவாயலின் உள்ளே / வெளியே எந்தவிதமான உணவும் பானமும் பகிர்ந்தளிக்க வைக்கப்பட்டிருக்கக் கூடாது.
  19. பள்ளிவாயலில் வுழூ செய்தல் கூடாது. தேவை ஏற்படின் குழாய் மூலம் நீர் பெற்றுக்கொண்டு வுழூ செய்ய வேண்டும். பொதுவான நீர் தொட்டி (ஹாவ்ல்) பயன்படுத்தக்கூடாது.
  20. காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல்,தொண்டை புண், மூச்சுத் திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.
  21. பள்ளிவாயலினுள் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  22. தொடுதல் அவசியம் அற்ற கழிவுத் தொட்டிகளை (Pedal Type) வழங்குவது முக்கியம்.
  23. கழிவறைகளுக்கு முறையான நீர் இருக்க வேண்டும் மற்றும் கைகளை சுத்தம் செய்ய சோப்பு / திரவ சோப்பு இருக்க வேண்டும்.கழிவு அறைகளின் தூய்மையை பராமரிக்க, ஒரு நபர் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
  24. தனிமைப்படுத்தலில் இருக்கும் எவரும் பள்ளிவாயலுக்கு செல்லக்கூடாது.
  25. வழக்கமான சுத்திகரிப்பு நடைமுறைகளை பராமரிக்கவும்.
  26. ஒவ்வொரு நேர தொழுகைக்கு பின்னும் மோப்பிங் செய்தல், சோப்பு இட்டு கழுவுதல் வேண்டும்.
  27. தொழுகைக்கு முன்னும் பின்னும் பள்ளிவாயல் வளாகத்தில் எவரும் இருக்கக்கூடாது.
  28. அவ்வப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் பள்ளிவாயல் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *