எதிர்மறை எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்!

பொதுவாக நெருக்கீடுகள் ஏற்படுவதற்கான காரணியிலிருந்து விலகிச் செல்லும் போது நெருக்கீடும் குறைவடைவது வழமையாகும். ஆனால் கொரணாவினால் ஏற்பட்ட நெருக்கீடு தொடர்ந்து செல்கிறது.

இந்நிலை தொடருமாயின் உள்ளத்தில் நிறந்தரமான வடுக்களை ஏற்படுத்தி அதிமமான மக்கள் எதிர் காலத்தில் உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
கொரணவினால் தற்போது வாழ்க்கை முறை மாற்றமடைந்துள்ளது எந்த நேரத்திலும் பயமும் சந்தேகமும் கொண்ட மனநிலையில் வாழவேண்டி யுள்ளது. மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைக்கமுடியாது, வைத்தியர்களிடம் நோய்க்கு மருந்துகளை எடுப்பதில் சிறமம் ஏற்பட்டுள்ளது, வைத்திய சாலைகளுக்குச் செல்வதற்கு அச்சம், பொது இடங்களுக்கு செல்வதற்கு பயம், சுகம் விசாரிக்க செல்ல முடியாத நிலை, சிறுசிறு உடல் உபாதை ஏற்பட்டால் கூட அது கொரனாவுக்கான அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம், நமக்கு வந்தால் நமது குடும்பம் என்னவாகும் என்ற பயம் போன்ற எதிர் மறையான மனநிலையில் இந்த நோய் வராமலேயே மிகுந்த மனப்பதட்டத்தில் ஒவ்வொரு நாளையும் கழித்து வாழவேண்டியுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் எதிர் மறையான எண்ணங்களுடன் வாழ்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும், மன அழுத்தமும் அதிகரிப்பதாகவும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இதனால் இவ்வாறானவர்களுக்கு கொரணா நோய் தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்தும் கொரணாபற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இருந்து விலகியிருப்பது நல்லது. சமூக வலைத்தளங்களில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். அது மனநிலையை பலவீனப்படுத்தும். இதே வேளை கொரணா பற்றிய அபாயகரமான தகவல்களை மற்றவர்களுக்கு பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் . எல்லோரும் மனவலிமை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

சாதாரண இருமல், தொண்டை நோவு, காய்ச்சல் வந்தால் அது கொரணா நோய் அறிகுறியாக இருக்குமோ என்று தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம்.

வீட்டில் இருக்கும் நேரங்களை மகிழ்ச்சியாக கழியுங்கள் இனிமையான பாடல்களைக் கேட்டல், பிள்ளைகளுடன் விளையாடுதல்,புத்தகங்கள் வாசித்தல், தியானம் வழிபாடுகளில் ஈடுபடல் . வீட்டில் உள்ளவர்களிடம் இந்த நோயை பற்றி பேசாமல் அவர்களிடம் அவர்களின் எதிர்கால திட்டம், அவர்கள் ஆசைகளைக் கேட்டு ஊக்கப்படுத்தல். வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல் என்பவற்றை திட்டமிட்டு கடைப்பிடித்து வருவதால் எதிர் மறை எண்ணங்கள் குறைவடையும்.

உள்ளத்தில் எழும் நேரான எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எதிரான எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். என்பதை புரிந்து மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

NM.Nouzath. BA,
Dip in Counseling, Dip. in Sp. Edu
Psychological Counselor
Samurdhi Social Development Officer
Kalmunai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *